Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டு., அரசாங்க அதிபர் வேண்டுகோள்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும்

பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டு., அரசாங்க அதிபர் வேண்டுகோள்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன்,மற்றும் வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர் திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

 
 CATEGORIES