Breaking News
Simone Veil மருத்துவமனையில் இடம்பெற்ற ஒரு மருத்துவத் தவறு !
.
Simone Veil மருத்துவமனையில் இடம்பெற்ற ஒரு மருத்துவத் தவறு.
இன்று பிரான்ஸ் ஊடகங்களில் ஒரு செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது அதாவது பிரான்ஸின் தொண்ணூற்றி ஐந்தாவது நிர்வாகப் பிரிவான Val d’Oise மாவட்டத்தில் உள்ள Eaubone என்ற நகரத்தில் அமைந்திருக்கும் Simone Veil மருத்துவமனையில் இடம்பெற்ற ஒரு மருத்துவத் தவறு தொடர்பான செய்தியே அதுவாகும்
35 வயதான பட்டயக் கணக்காளரான லூசி என்ற பெண் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது மூன்றாவது குழந்தையைப் பெறுவதற்காக Eaubone என்ற நகரத்தில் அமைந்திருக்கும் Simone Veil மருத்துவமனைக்குச் சென்றார். ஏற்கனவே அவருக்கு இந்தப் பிரசவம் தொடர்பான எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. அவர் அந்த மருத்துவமனையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்பட்டபோது அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவர் அங்கிருக்கவில்லை.அவருக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு பிரான்சுக்கு வந்து தொழில் புரிவதற்கான அனுமதியை பெறுவதற்குரிய பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு பயிற்சி மாணவர் மருத்துவர் மட்டுமே அப்போது அங்கிருந்த அங்கிருந்தார்.அந்தப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டபோது, அவர் அங்கிருந்த மருத்துவ தாதி மற்றும் மருத்துவ சேவை பணியாளர்களின் உதவியோடு பிரசவம் பார்க்கும் வேலைகளை ஆரம்பித்தார். பிரசவத்தின்போது பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக முள்ளம்தண்டுல் போடப்படும் ஊசி அந்தப் பொண்ணுக்கு ஏற்றப்பட்டது இந்த ஊசியை முள்ளம் தண்டின் அதிக ஆழத்திலும் அதிக டோஸுடன் அந்த மருத்துவர் செலுத்திவிட்டார் .இதனால் இடுப்புப் பகுதியில் மட்டும் விறைப்பு ஏற்படுவதற்கு பதிலாக முள்ளந்தண்டு பகுதிகள் முழுவதும் விறைப்புக்குள்ளானதுடன் அந்தப் பொண்ணுக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் சத்திர சிகிச்சை செய்து குழந்தையும் வெளியே எடுக்கப்பட்டது. இந்தச் சத்திரசிகிச்சையின்போது வெளியே எடுக்கப்பட்ட பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்தது. ஆனால் அந்தக் குழந்தையின் தாயான லூசி 98 வீதம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் .அவருக்கு 15 நிமிடங்கள் மூளைக்கு ஒட்ஸிசன் செல்வது தடைப்பட்டதால் இந்த நிலை ஏற் பட் டது ஏற்பட டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் லூசியின் குடும்பத்தினர் மருத்துவமனையின் இந்தத் தவறை சுட்டிக்காட்டி வாதிட்டபோது ,மருத்துவமனை நிர்வாகம் அதைக் கவனத்தில் எடுக்காதது மட்டுமில்லாமல், அந்த மருத்துவ பிழையை மூடி மறைக்கவும் செய்தது.இதை அடுத்தது
லூசியின் குடும்பத்தினர் இது தொடர்பாக 95 ஆவது நிர்வாகப் பிரிவில் உள்ள Pontoise நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு la commission de conciliation et d’indemnisation des accidents médicaux d’Île-de-France (CCI) என்ற மருத்துவ விபத்துகளில் மட்டும் தவறுகளைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தது.
இந்த ஆணைக்குழுவில் இடம்பெற்ற மருத்துவ நிபுணர்கள் தங்களது விசாரணையின் இறுதியில் லூசியின் விடயத்தில் மருத்துவ பிழை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர் .அவருக்குப் பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர் இரண்டு தடவைகள் மயக்க ஊசி போட்டவையும் அதை முள்ளந்தண்டுல் ஆழமாகச் செலுத்தியதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து Pontoise நீதிமன்றம் லூசி குடும்பத்தின் முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஒரு மருத்துவரின் தவறால் 98 வீதம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக உணர்வின்றி படுத்த படுக்கையாக இருக்கும் லூசிக்கான நியாயத்தைப் பெறுவதற்கான முதல் படியில் காலடி வைப்பதற்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது . சிறந்தமருத்துவ கட்டமைப்பைக் கொண்ட பிரான்சிலேயே இந்த நிலைமை என்றால் இலங்கையில் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் யோசித்து பார்த்தேன்.