Breaking News
பள்ளம் மேடுகளில் ஓடிய உள்ளம் கவர்ந்த வண்டி !
.
ஒன்றையொன்று முந்தாமல் ஒற்றுமையா ஓடின வண்டி
நின்றுநின்று எல்லோரையும் நேர்மையாய் ஏற்றிய வண்டி
சண்டை எதுவும் வராமல் சாதுவாச் சென்ற வண்டி
மந்தைபோல அடையாமல் மனிதர்களை மதித்த வண்டி
முதியோரைச் சிறியோரை மெதுவா ஏற்றிய வண்டி
அதிவேகமாய் ஓடாமல் ஆபத்தைத் தவிர்த்த வண்டி
கிரவலிலும் பள்ளத்திலும் கெத்தா ஓடின வண்டி
அலுவலாகப் பயணிப்போர்க்கு அவசியமாக இருந்த வண்டி
போதையின்றி பேதமின்றிப் பேரைக் காத்த வண்டி
பாதைகளில் நிறுத்தியெம்மைப் பக்குவமாய் சுமந்த வண்டி
வம்புச்சேட்டை செய்வதற்கு இடமளிக்காதிருந்த வண்டி
ஐம்பது சதக் காசைக் கூட அபகரிக்காது தந்த வண்டி
போர்க்காலம் எங்களுக்குதவிய -ஈழப் போக்குவரத்துக் கழக வண்டி
போனகாலத்தோட நிறைய நல்லதெல்லாம் போச்சடா தம்பி !
-பிறேமா(எழில்)-