டிரம்பின் அச்சுறுத்தல் – கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
.
கிறீன்லாந்தினை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளதை தொடர்ந்து டென்மார்க் கிறீன்லாந்திற்கான பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்கான நிதிஒதுக்கீட்டில் அதிகரிப்பை செய்யவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.
டென்மார்க் பிரதமர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் இதனை அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை வெளியிடவேண்டிய தருணத்தை விதியின் முரண்நகைச்சுவை என அவர் வர்ணித்துள்ளார்.
கிறீன்லாந்தின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இரண்டு கண்காணிப்பு கப்பலல்களையும், இரண்டுநீண்ட தூர ஆளில்லா விமானங்களையும் கொள்வனவு செய்ய முடியும் என கிறீன்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிறீன்லாந்தில் அமெரிக்காவின் விண்வெளி தளமொன்று காணப்படுகின்றது.
மேலும் வடஅமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்வதற்கான குறுகிய பாதையில் அமைந்துள்ளதால் கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு மூலோபாய அடிப்படையில்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இங்குபெரும் கனிமவளங்கள் காணப்படுகின்றன.
கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என அதன் பிரதமர் மியுட் எகிட் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய தீவுகளில் ஒன்றான கிறீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்கா தன்னுடன் இணைத்துக்கொள்ளும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே கிறீன்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிறீன்லாந்து எங்களுடையது,நாங்கள் விற்பனைக்குரியவர்கள் இல்லை,ஒருபோதும் அது இடம்பெறாது என பிரதமர் மியுட் எகிட் அறிக்கையொன்றி;ல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டென்மார்க்கிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம் குறித்து விடுத்த அறிக்கையில்ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதும் சுதந்திரம் ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டு; கிறீன்லாந்தின் உரிமை தன்னிடம் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது என குறிப்பிட்டிருந்தார்.
டென்மார்க் பிரதமரின் அலுவலகம் டிரம்பின் இந்த கருத்தினை நிராகரித்திருந்ததுடன் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்திருந்தது.
2019 இல் டென்மார்க் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்ததை தொடர்ந்து டிரம்ப் அந்த நாட்டிற்கான விஜயத்தை இரத்துச்செய்திருந்தார். கிறீன்லாந்தில் 55000 பேர் வசிக்கின்றனர்.