Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ்ப்பாணப் பெண்மணி அனித்தா!

.

மணப்பெண் அலங்காரத்தில் சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ்ப்பாணப் பெண்மணி அனித்தா!
18-10-2024 அன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை. அந்தவகையில் இந்த போட்டியானது இந்த வருடம் கம்போடியாவில் நடைபெற்றது.
எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை - யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.