Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வீதியால் சென்றவர்களை தாக்கி பணம் பறிப்பு - வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்,

,

வவுனியா - கற்குழி பகுதியில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கி அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதுதொடர்பில் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் அவர்கள் வரவில்லை என பாதிகப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 9 மணி வரை இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதி மற்றும் கற்குழி செல்லும் வீதி என்பவற்றில் மது போதையில் வாள்கள், பொல்லுகளுடன் நின்ற இளைஞர் குழு ஒன்று,

குறித்த வீதிகளில் கற்களை போட்டும், போத்தல்களை உடைத்தும் வீதியால் சென்றவர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்துள்ளனர்.

இதன்போது இரண்டு மோட்டர் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கமான 107 இற்கு அழைப்பு எடுத்து அறிவித்த போதும் பொலிசார் வரவில்லை எனவும், 

தாம் தாக்குதல் மேற்கொண்டவர்களிடம் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.