பிரான்ஸில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் பலி - தீவிரவாத தாக்குதல் என உறுதி
.

பிரான்ஸின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதல்: அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார்,தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று கிழக்கு பிரான்சில் ஒருவரைக் கொன்றது மற்றும் மூன்று பேர் காயமடைந்த ஒரு கத்திகுத்து தாக்குதல் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று கூறினார், பிரான்சின் பயங்கரவாத எதிர்ப்பு வழக்குரைஞர் அலுவலகம் இந்த வழக்கை விசாரிப்பதாக உறுதிப்படுத்தியது. சனிக்கிழமை பிற்பகல் முல்ஹவுஸ் நகரில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை ஒருவர் “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டவாறு தாக்க வந்தாகவும் அதனைத தடுக்க முயன்ற ஒரு வழிப்போக்கர் கொல்லப்பட்டார், மூன்று போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று PNAT வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இது எந்த சந்தேகமும் இல்லாமல் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்” என்று மக்ரோன் செய்தியாளர்களிடம் வருடாந்திர பிரெஞ்சு பண்ணை நிகழ்ச்சியில் கூறினார், உள்துறை அமைச்சர் உடனடியாக முல்ஹவுஸுக்குச் செல்கிறார் என்று கூறினார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.