Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள் - கிளிநொச்சியில் சம்பவம்

வழிபறியில் ஈடுபட்ட இருவரை நையப்புடைந்த மக்கள்.

 வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரிடம் வழிபறியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து  முகக்கவசத்துடன் சென்ற இருவர் பரந்தன் பூநகரி வீதியில் உள்ள தம்பிராய் பகுதியில் குறித்த வர்த்தரின் தொலைபேசி மற்றும் பணப்பையை பறித்துகொண்டு தப்பி செல்ல முற்பட்டுள்ளனர். 

அவ்வீதியால் பயணித்த மக்களுக்கு விடயத்தை பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த இருவரையும் துரத்திச் சென்ற பொது மக்கள், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயற்சித்த நிலையில், முட்கொம்பன் பகுதிக்குள் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

முட்கொம்பன் காரியன்கட்டுக் குளம் பகுதியினூடாக தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த இருவரையும் பிரதேச மக்களின் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நையப்புடைந்த மக்கள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.