Breaking News
60 ஆண்டுகளின் பின் வெள்ளத்தை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலியா!
,
அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு குயின்ஸ்லாந்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் வடக்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் 700 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
இதேவேளை நாளை வரை சீரற்ற காலநிலை தொடரும் என அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது,
60 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.