Breaking News
வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டி
கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செலுத்தியுள்ளது.

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செலுத்தியுள்ளது. வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் மாவட்ட கிளையினர் செலுத்தியிருந்தனர்.