Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் ஆபத்தான நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்! மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

.

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

காலியில் நேற்றிரவு மர்மநபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெத்தும் அல்லது ‘லொக்கா’ என்ற நபர் கொல்லப்பட்டார்.தடல்ல பிரதேசத்தில் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அந்த நபர், காலி, மெலேகொட பகுதியைச் சேர்ந்த ஐந்து கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.