Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் காலம் நெருங்கிவரும் சூழலில், தமது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் பிரதான கட்சிகள்.

கூட்டணியை பிளவுப்படுத்த ஆளுங்கட்சியுடன் ‘டீல்’

எதிர்க்கட்சியின் கூட்டணியை பிளவுப்படுத்த ஆளுங்கட்சியுடன் ‘டீல்’: தனிப்பட்ட விடயங்கள் குறித்தும் விமர்சனம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் காலம் நெருங்கிவரும் சூழலில் பிரதான கட்சிகள் தமது கூட்டணிகளை றுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய கட்சிகள் தமது கூட்டணிகள் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை எடுத்துவிட்டன.

ஆளுங்கட்சி மாத்திரமே இன்னமும் தமது கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிப்புகளை வெளியிடாதுள்ளது.

ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணியை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. குறித்த கூட்டணியின் வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

என்றாலும், ஐ.தே.கவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இன்னமும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென்பதே பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பாகும். ஆனால், ரணில் விக்ரமசிங்க, இதற்கு இணங்க முடியாதென திட்டவட்டமாக பசிலிடம் கூறிவிட்டார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்படும் பரந்தப்பட்ட கூட்டணியை சீர்குலைக்க அரசாங்கத்தின் தரப்பில் வழங்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமுல்படுத்தி வருவதாக தெரிய வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைபவர்களுக்கு எதிராக ஊழல் – மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவது, தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துகளை வெளியிடுவது மற்றும் அவர்கள் இணைவதை தடுக்கும் வகையில் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவதுமே இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணியாகும்