Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தென்கொரிய விமான விபத்திற்கு இரங்கல் தெரிவித்த இலங்கை..!

.

தென் கொரியாவின் (South Korea) முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது இரங்கலைத் குறிப்பிட்டுள்ளது.இதுதொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, சம்பவத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் காயங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், “இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இழப்பை சமாளிக்கும் தைரியத்தை அவர்கள் பெறட்டும்.மேலும், காயமடைந்தவர்கள் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம்” என தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில் இருவரைத் தவிர ஏனைய பயணிகள் உயிரிழந்துள்ளனர்.