Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர்,உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவரை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள்; கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்.

யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத்தால் ( printer) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதனையடுத்து, அவ்விடத்தில் ஒன்று கூடிய சக உத்தியோகஸ்தர்கள் ஒன்று கூடி தாக்குதல் மேற்கொண்டவரை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.