Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இராஜதந்திர பயணம் ; இந்திய விஜயத்துடனேயே சீனாவிற்கும் செல்லும் அநுர!

.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayak), தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், தமது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளை பகிர்ந்து கொள்ளவுள்ளார்.அதன் பின்னர், அடுத்த மாத ஆரம்பத்தில் அவர், சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது முதலீடுகளை ஈர்த்தல், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு என்பனவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட பட்டுள்ளது.

இந்தநிலையில், புதுடெல்லியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மின்சாரத் துறையில், இந்திய முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஹேரத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியின் இந்திய விஜயம் டிசம்பர் 16 திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் செல்லவுள்ள தூதுக்குழுவை அரசாங்கம் தற்போது தயார் செய்து கொண்டிருக்கிறது.ஜனாதிபதி திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயம் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறும் போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிதியுதவி வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்தும் இந்த விஜயத்தின் போது விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.