அனுரகுமாரதிசநாயக்க சுவீடனின் ஸ்டொக்கோமில்: தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம். தெரிவித்துள்ளார்.
தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்.
தே.ம.சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ரணில்,மகிந்த, சந்திரிகா ஒன்றிணையலாம்.
சந்திரிகா ரணில்மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ஒன்றிணையக்கூடும் அவர்கள் ஒரே தளத்தில் காணப்படலாம் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுகள் இதற்கு தடையாக காணப்படலாம் எனவும் சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க கொள்கைகள் அடிப்படையில் அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரலாம் எனவும் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் நான்காம் திகதிக்குள் நடைபெறலாம் என சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறுதாக்குதலை மேற்கொண்டவர்களும் அதனை தடுக்கவேண்டியவர்களும் இணைந்து செயற்பட்டனரா என்ற கேள்வி காணப்படுகின்றது இது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு இட்டுசெல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தாஜ்சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்கவைக்க முயன்று தோல்வியடைந்த ஜமீல் தெகிவளைக்கு சென்றார் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர் மீண்டும்குண்டை வெடிக்க வைக்க முன்னர் புலனாய்வு பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் இது எப்படி சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொடி ஜஹ்ரான் என்ற நபர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.