Breaking News
ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்றுவந்த திலின ஹர்ஷனி உயிரிழப்பு.
ஏப்ரல் 21, 2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; ஐந்து வருடங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவரது மகன் துலோத் அந்தோனியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 21, 2019 அன்று, 8 இடங்களில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 273 பேர் கொல்லப்பட்டனர்.
500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.