Breaking News
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில் !
.
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.