ஆட்டம் காணும் பிரஞ்சு அரசியல்? ஆடிப்போயுள்ள கட்சிகள்!
தீவிர வவலதுசாரி கட்சியே (RN & alliés)வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில்.
நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கையைக் கொண்ட தீவிர வவலதுசாரி கட்சியே (RN & alliés)வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரும் கூட இந்தத் தீவிர வலது சாரி கட்சி வெல்ல வேண்டுமென்பதில் விருப்பம் கொண்டிருந்தார்கள். பிரான்சுக்கு எப்போதுமே இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று அதன் காலனித்துவ முகம். மற்றது பிரெஞ்சு புரட்சியம் அதன் பின்பு வந்த பாரிஸ் கொம்யூன் மற்றும் அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாணவர் எழுச்சி முதலான பல்வேறு இடது சாரிபின்புலம் கொண்ட போராட்ட முகம். பிரான்ஸ்னுடைய அரசியலமைப்புச் சட்டமும், தேர்தல் முறையும் தீவிர வலது சாரிகள் அல்லது தீவிர இனவாதிகள் அறுதிப்பெரும்பான்மையுடன் வெல்வதற்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன. ஒரு தேர்தலில் முதலாவது சுற்று வாக்கெடுப்பில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்பவரே வெற்றி பெறுவார். எவருக்கும் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் முதல் இரண்டு இடத்தில் உள்ள வேட்பாளர்கள் இரண்டாம் சுற்றுத் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும். இந்த வேட்பாளர்களுக்கு, மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ள வேட்பாளர்கள் தங்களது ஆதரவை வழங்கலாம். இந்த ஆதரவு வலது, இடது மைய அரசியல் என்று மூன்று தளங்களில் இருக்கும். பொதுவாகவே பிரான்சினுடைய தேர்தல் வரலாற்றில், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் அதி தீவிர வலது சாரிகளையும், இனவாதிகளையும் தோற்கடிப்பதற்கு அனைத்து இடது சாரிகளும் ஒன்றிணைவது வழக்கம். இம்முறையும் அவ்வாறே நடந்திருக்கிறது. முதல் சுற்றில் வாக்குகள் பிரிவடைந்ததால் அதிதீவிர வலது சாரி கட்சி முன்னணிக்கு சென்றது. ஆனால் தற்போது நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில் அது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாதபோதிலும், இடது கூட்டணிக்கு(NFP) அதிகளவு ஆசனங்கள் உள்ளது என்ற வகையில், அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் கொள்கை அடிப்படையில் அரசுத்தலைவர் மைக்ரோனுடைய கட்சியினர் (Ensemble) இந்தக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பிரான்ஸின் மரபுவழி வலது சாரி கட்சியும்(LR & DVD) அதிதீவிர வலது சாரி கட்சியும் இணைந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்குப் பலம் கிடையாது. அரசுத் தலைவர் பிரான்சுவா மைக்ரோனுடைய கட்சி அவர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை. இதுதான் இந்த இந்த நிமிடத்தில் உள்ள பிரான்ஸ் அரசியல் நிலவரம் ஆகும்.
சிவா சின்னப்பொடி பாரிஸ்