Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கனடாவை கண்டிக்கும் அருணிவிஜயவர்த்தன. தமிழினப்இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கனடா சிறீலங்காமீது மீண்டும் சுமத்தக்கூடாது!

இலங்கையில் இடம்பெற்றமோதல்கள் தொடர்பில் இனப்படுகொலை தொடர்பான தவறான கதைகளை வெளியிடும் கனடா!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது.

 

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர்மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணிவிஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை வருவாய்ஈட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இலங்கை பொருhளதார இராஜதந்திரத்திற்கு கொடுத்துள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்துள்ளார்.

நல்லிணக்கத்தை அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு சமாந்திரமாக இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றமோதல்கள் தொடர்பில் இனப்படுகொலை தொடர்பான தவறான கதைகளை வெளியிடும் விதத்தில் கனடாவில் அண்மைய ஆண்டுகளில் உயர்மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் ஆழ்ந்த கவலையை வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

கனடா இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் ஈடுபாட்டை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை நல்லிணக்கத்திற்கான முயற்சிகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.