Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்; முல்லையில் இரு நிகழ்வுகளில் பங்கேற்பார்.

ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்; முல்லையில் இரு நிகழ்வுகளில் பங்கேற்பார்.

வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அன்று காலை 9.30 மணிக்கு புதுக்குடியிப்பு மத்திய கல்லூரி கலையரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படுகின்ற சிக்கலில்லா இல்லத்தின் முழு உரிமையை அனைவருக்கும் உரித்தாக்கும் உன்னத நோக்கில் உதயமான உருமய(உரித்து) தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் இலவச காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அழைப்பின் பெயரில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து அன்று மாலை மாங்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கின் மிகப் பிரமாண்டமான மாங்குளம் புனர்வாழ்வு மருத்துவமனையை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.