எத்தனை இடர்வரினும் மக்கள் பணியினின்று ஓயோம்
.
கடந்த பதினைந்து ஆண்டுகால மக்கள் பணியில், என்றுமில்லாதவாறு சதிகள், சூழ்ச்சிகள், சேறுபூசல்கள், பொய்ப் பிரசாரங்கள் என்பவற்றின் ஊடாக மக்கள் மத்தியில் எமக்கிருக்கும் செல்வாக்கை மதிப்பிழக்கச் செய்யும் வகையிலான செயற்பாடுகளைப் பலரும் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், எமது மக்கள் தீர்க்கம் நிறைந்த அரசியல் பார்வையோடும், தெரிவுகள் குறித்த தெளிவோடும் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
எத்தகைய இடர்களும் தடைகளும் வந்தாலும் இதுவரைகாலமும் தனிமனித அறம்வழுவாது ஆற்றிய பணிகளின் தடத்தில், இனியும் எனது அரசியற் களப்பணி தொடரும் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு, சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.