ரணிலுக்கு ஏற்பட்ட நிலைமை எமக்கும் ஏற்படும்; ஒப்பிட்டு அறிவுறுத்துகிறார் நாமல்!
.
இவ்வாறு கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டதன் மூலம் அக்கட்சிககு ஏற்பட்ட படுதோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், கட்சி பிளவுபட்டால் தேர்தலில் தோல்வியை நிச்சயம் சந்திக்க நேரிடும் எனவும், நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிளவு காரணமாகவே உடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கட்சிகளை பிளவுபடுத்துவது அல்ல, ஒன்றுபட்டு வலுவாக நிற்பதுதான் இந்த சந்தர்ப்பத்தில் நாம் செய்ய வேண்டிய விடயம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமலின் இந்த கருத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்படடுள்ள கடுமையான பிளவுகளை எடுத்துக் காட்டுவதுடன், அவரது அச்சத்தையுத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் அக்கட்சியின் எதிர்கால பயணத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துகளை வெளிப்படுத்திவரும் பின்புலத்தில் நாமல் ராஜபக்ச இந்தக் கருத்தை தெரிவித்துள்ளமையும் அவதானிக்கத்தக்கது.