Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குவைத் தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம்- வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம்

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

 என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க முடியவில்லை.

அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப், ஃபாஹில், அபுகலிஃபா, மெஹபுல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கரும்புகைகளுக்கு நடுவே டோர்ச் லைட் அடித்து காப்பாற்றுமாறு தொழிலாளர்கள் கதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.