ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள தமிழருக்கான நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள தமிழருக்கான நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்.
இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்க தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் போருக்கு பின்னான 15 வருடங்களில் சகல வழிகளிலும் ஏமாற்றங்களை சந்தித்து விரக்தியடைந்துள்ள நிலையில், தங்களுடைய கொள்கைகளை நிலைநிறுத்தவே இவ்வாறா முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனீவா தீர்மானங்களாலும் எந்தவொரு பயனும் இல்லை. இந்த நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி தங்கள் கொள்கையை நிலை நிறுத்தவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் தொடர்பாக தற்போது பேசிக் கொண்டிருக்கின்றோம் என விளக்கியுள்ளார்.
குறிப்பாக 2ம் வாக்கு தொடர்பாக பேசப்பட்டதோடு, தாங்கள் தெளிவாக பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதாவது, 2ம் வாக்கு தொடர்பில் தமக்கு உடன்பாடில்லை எனவும், 5 ஆயிரம் வாக்கு வந்தாலும், 50 ஆயிரம் வாக்கு வந்தாலும், 5 லட்சம் வாக்கு வந்தாலும் பரவாயில்லை.
ஏண்ணிக்கை பெரிதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.வந்த வாக்குகளை தங்களின் கொள்கைக்கான வாக்குகளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும், வாக்குகள் குறைவாக இருந்தாலும் அடுத்தமுறையேனும் தங்களுடைய மக்களை அணி திரட்டுவதற்கான களத்தை இதன் மூலம் திறந்துவிடலாம் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை மத அமைப்புக்களை சிவில் சமூகங்களை இதன் மூலம் ஒன்றிணைக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் கூட வழியற்று இருக்கிறோம் என்பதையும் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.