நாளை இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்.
.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்யும் நோக்கில் ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார்.
மேலும் இப் பயணத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் இலங்கையில் இந்திய முதலீடுகள் தொடர்பில் எஸ்.ஜெயசங்கர் விசேட கவனம் செலுத்துவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற இந்திய மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருந்தார்.
இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் விசேட அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது இந்திய பிரதமருடனான கலந்துரையாடலில் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.