Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்!

வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை !

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது.

அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை.
 பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை.  இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள்.

முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.