கிளிநொச்சியில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான பாடசாலை மாணவர்கள் விவகாரம்- காப்பாற்ற நினைக்கும் தமிழ் அரசியவாதி!
இதுவரை 16 மாணவர்கள் குறித்த பயிற்றுனரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படும் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ள நிலையில், அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த நபர் ஆண் மாணவர்கள் பலரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த ஆசிரியரை பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரும், பொலிசாரும் பாதுகாப்பதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுவரை 16 மாணவர்கள் குறித்த பயிற்றுனரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் வாழ்வு சீரழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.