Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செம்மணி மனித புதைகுழி - பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை! விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை.

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது,

செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம்.

இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார்.

மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது.

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை.