Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா - பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும்; சி.ஐ.டியில் முறைப்பாடளித்த சட்டத்தரணி!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என கூறியே அனைத்து அரசாங்கங்களும் பதவிக்கு வருகின்றன.

இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். 

அதன்பின் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என கூறியே அனைத்து அரசாங்கங்களும் பதவிக்கு வருகின்றன.

பதவிக்கு வந்ததும் அதனை அடியோடு மறந்து விடுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சாட்சியங்கள் இல்லை என கூறப்படுகிறது.

இது மறுக்கப்படவேண்டிய ஒன்று. இலங்கை இராணுவத்திடம் தஞ்சமடைந்த இசைப்பிரியா மற்றும் சோபா ஆகியோர் கொல்லப்பட்டனர்.அதற்கு தகுந்த ஆதாரங்களும் சாட்சியங்களும் காணப்படுகின்றன. 

இருப்பினும் இவர்களது குடும்பத்தார் சாட்சியமளிக்க முன்வராமல் உள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தில் உள்ள எவரும் உயிருடன் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் பாலச்சந்திரனை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் இளையமகனாவார்.அவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டார். 

இந்த அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

வடக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.