Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர் சிறைப்படுகொலை வீரர்களுக்கு அஞ்சலி - விடுதலை கவனயீர்ப்பு நிகழ்வுகள் கிட்டுப் பூங்காவில்

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர்வு கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின் போது மதத் தலைவர்கள், அரசியற் கட்சிச் செயற்பாட்டாளர்கள், அரசியற் கைதிகளின் குடும்பத்தினர், விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியற் கைதிகள், குடிமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் பங்குகொண்டிருந்ததோடு, விடுதலை நீர் கையளிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

IMG-20250725-WA0104-1024x576.jpgIMG-20250725-WA0097-1024x560.jpgIMG-20250725-WA0107-1024x576__1_.jpg