Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ்மக்களை அடிமைப்படுத்துகின்றது - கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்!

தற்போதைய நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வரும்போது கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாக?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாளிகிதன் இன்றைய தினம் (19) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார் 
குறித்த ஊடக சந்திப்பு வாயிலாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு  நேற்று நடைபெற்றது. இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பெரும் விவாதம் பல மணி நேரம் நடைபெற்றது
குறித்த விவாதத்தின் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டமானது பல்வேறு வகையில் தமிழ் மக்கள் மீது இலங்கை தீவிலே சிறுபான்மை இனமான தமிழ்மக்களை அடிமைப்படுத்தி ஆட்கொண்டிருக்கின்றது 

தற்போதைய  நாட்டினுடைய ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வரும்போது கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார் 
தற்பொழுது கூறுகிறார் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை அரசாங்காம் தற்பொழுது அறிவித்திருக்கிறது 

குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய சபை அமர்வில் பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தின் போது தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையாது என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது 
இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட 37 பேரில் 36 பேர்கள் ஏகமனதாக தமது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர் 

மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கட்டாகாளி கால்நடைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு பல அசைவுகரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாகவும் போலீசாரால் கரைச்சி பிரதேச சபையிடருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகிறது.

இதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தார்