Breaking News
சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டணை உறுதி!
,
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது.
தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கும்படி பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இவ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் இரு பிரதிவாதிகளின் தண்டனையை நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


