Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மன்னாரில் மக்கள் மீது காவல்துறையினா் கண்மூடித்தனமாக தாக்குதல்- பலர் காயம்!

பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகளால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மன்னாரில் நேற்று(26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல்  காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில்   காவல்துறையினா்  மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.
மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில்  மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம் பெற்றது
இதனையடுத்து   காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை   அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது  காவல்துறையினா்   கொடூரமான  முறையில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனா். தாக்குதலில்  பலர் காயம் அடைந்தை நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
 
மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்
 இவ்வாறான பின்னனியில் நேற்று முன் தினம் ஜனாதிபதி , மக்களின் எதிர்ப்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்ச்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்
 இந்த நிலையில் நேற்றையதினம் (26) இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக   காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது  மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது .
 
அதனை தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட போது  காவல்துறையினா்  கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.
அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்
 
குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகளால்  அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்