Breaking News
”கடலுக்குள் பாலம்” Rameswaram to Sri Lanka - தலைமன்னாருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து சேவை.
.
ராமேஸ்வரத்தில் தயாராகும் கப்பல் போக்குவரத்து பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இலங்கை தலைமன்னாருக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க கடல் பாலம் அமைக்க 200 மீட்டருக்கு துளையிட்டு மண் பரிசோதனை ஆய்வுப் பணிகள் தொடக்கம்; கடலுக்குப் பாலம் அமைத்து விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளதாக கடல்சார் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.டெல்லிக்கு வந்த இலங்கை அதிபர் அனுராக் குமார் திசாநாயகே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் போது இருநாடுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உரையாடினர். இதில் 1964-ம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து இயங்கியது போல் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.