Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெனிசுலா - அமெரிக்க உறவில் புதிய பதற்றம் ; ட்ரம்ப் குற்றச்சாட்டு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் சிறப்பு அவசரநிலையை அறிவித்து உள்ளார். ரஷ்யா,சீனாவிடமிருந்து பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளும், ஏவுகணைகளும் எல்லையில் தயாராக உள்ளது.

வெனிசுலா - அமெரிக்க உறவில் புதிய பதற்றம் ; ட்ரம்ப் குற்றச்சாட்டு

தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவில் கடல் மார்க்கமாக தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசுபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வெனிசுலா - அமெரிக்க உறவில் புதிய பதற்றம் ; ட்ரம்ப் குற்றச்சாட்டு | Tension Venezuela Us Relations Trump Accusation
இந்நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.

அத்துடன், உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
இது, போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுவதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கவும் வெனிசுலா ஆயத்தமாகி வருகிறது.
அதன்படி, சிறப்பு அவசரநிலையை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் அறிவித்து உள்ளார்.
'பிளான் இன்டிபென்டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெற்ற வான் பாதுகாப்பு அமைப்புகளும், ஏவுகணைகளும் எல்லையில் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.