Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் பிசினஸ் பார்ட்னராக கைகோர்க்கும் நயன்தாரா!

.

"டிரா மூலம் அதிகமான மக்களை எங்களின் பொருட்களை கவர்வதாக நம்புகிறோம்" : நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் 9ஸ்கின் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிறுவனம் ரூபாய் 999 முதல் 1899 வரை பல்வேறு ஸ்கின் கேர் தயாரிப்புகளை வழங்குகிறது. தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்ட நயன்தாரா, தற்போது இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார்.நயன்தாரா, "ஜவான்" என்ற இந்தி படத்தில் நடித்த பிறகு, இஷா அம்பானியுடன் நட்பு வளர்த்து வருகிறார். இந்நிலையில், இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்லுடன் நயன்தாரா பங்குதாரராக மாறியுள்ளார். இஷா அம்பானியின் தலைமையிலான டிரா (Tira) என்ற ஆன்லைன் இணையத்தளத்துடன் இணைந்து, 9ஸ்கின் தயாரிப்புகள் இனி ரிலையன்ஸ் ரீடெய்லின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

கூடுதலாக, 9Skin நிறுவனம் "Skinderella" Hydrogel Mask என்ற புதிய பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது Tira என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறும்.இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் Tira இணையதளம் மூலம் 9Skin பொருட்களை வாங்கலாம்.நயன்தாரா டிராவுடன் இணைவது குறித்து கூறும்போது,"டிராவுடன் கூட்டு சேர்ந்து இந்திய சந்தையில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து வகையான தோல் வகைகளுக்குமான சுத்தமான, பயனுள்ள மற்றும் நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம். டிரா மூலம் அதிகமான மக்களை எங்களின் பொருட்களை கவர்வதாக நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.