Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை நேரில் சென்று மதிப்பளித் ரவிகரன் எம்.பி!

ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்துள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் தோற்றி, ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று வாழ்துவதுடன், மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப்பிரிவில் - 3Aசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான இராஜேயஸ்வரன் யூலியானா, உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான மிராஜ் நிடா பாத்திமா, வணிகப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான அன்ரனிற்றா நிலூஜினி அருள்ஜெனிபேட், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் 2A,Cசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான செந்தில்வேல் சிந்துசன், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம்நிலை பெற்ற குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான பகீரதன் லாசன்ஜா, வணிகப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாம்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான ஜனோதினி தவபாலசிங்கம், வணிகப்பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காம்நிலை பெற்ற முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவியான பானுசா தர்மராசா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காம் நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான சுதாபரன் எழில்வண்ணன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாம்நிலை பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான கந்தசாமி சஜீபன் ஆகிய மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முதற்கட்டமாக நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரப்பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு துறைசார் பிரிவுகளில் முதல் ஐந்து நிலைகளைப் பெற்ற ஏனைய மாணவர்களையும், தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களினூடாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மதிப்பளிக்கத் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.