Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் - நிராகரித்த நீதிமன்றம்!

ஒரு தீர்மானத்தை - கட்சி எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தை அணுகி தடை விதிக்கும்படி கோர வேண்டிய தேவை மனுதாரருக்கு அவசரமாக எழுந்திருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கக் கோரி வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் தாக்கல் செய்த வழக்கில், இடைக்காலத் தடை விதிக்கும் கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரம் பிரதேச சபை தலைவர், உப தலைவர் தெரிவுகளின் போதும், தெரிவுக்கான தேர்தல் முறைமை தொடர்பிலும் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக சபை அமர்வில் நடந்து கொண்டார் என்று தெரிவித்து, அதற்காக அவரிடம் விளக்கம் கோரியும், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தியும் கட்சியின் பொதுச்செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.

கட்சியில் அந்த முடிவை இரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும, அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கட்சியின் இடைநிறுத்தல் முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது என்று வழிகாட்டுதல் பணிப்புரை வழங்கும்படி வேண்டியும் இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சுபாகர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். வழக்கு திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மனுதாரர் தரப்பு சட்டத்தரணி தனி ஒரு தரப்பாக முன்னிலையாகி தமது விண்ணப்பத்தை முன்வைத்தார்.

வழக்கைப் பரிசீரித்த மாவட்ட நீதிபதி சதீஸ்வரன், இடைக்கால உத்தரவு தொடர்பான தீர்ப்பை புதன்கிழமை வழங்குவதாகத் தெரிவித்து இருந்தார். தீர்ப்பு நேற்று காலை வழங்கப்பட்டது.

பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் தேர்வு தொடர்பாகக் கட்சியின் நிலைப்பாடு தமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரிடம் விளக்கம் கோரி பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த விடயம் அவருக்குத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பதைப் பொதுச்செயலாளர் குறிப்பிட்டிருக்கின்றமையை நீதிபதி தமது நிராகரிப்பு உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

கட்சி விளக்கம் கோரியுள்ளது. விளக்கத்தைப் பார்த்து ஒரு முடிவை - தீர்மானத்தை - கட்சி எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தை அணுகி தடை விதிக்கும்படி கோர வேண்டிய தேவை மனுதாரருக்கு அவசரமாக எழுந்திருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை என்று நீதிபதி தமது இன்றைய உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

எனினும், வழக்கின் எதிர் மனுதாரர்களான கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கட்டளை வழங்கினார். அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.