Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசுக் கட்சியின் வழக்கு- மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

இரு தரப்பினரும் எழுத்து மூல ஆட்சேபனைகளைச் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் படியும், அதன் பின்னர் நீதிமன்றம் அது தொடர்பில் உத்தரவு ஒன்றை வழங்கும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிராளிகளில் ஒருவராக இருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தப் பதவியில் இருந்து விலகிய நிலையில் காலமாகிவிட்டார். 

அவரது இடத்துக்கு மற்றொரு எதிராளியாகக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைப் பதிலீடு செய்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியதோடு, அடுத்த வழக்குத் தவணைக்கு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இவற்றுக்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் என்ற பெயரில் சுப்ரமணியம் சபாரத்தினம் என்பவர் சார்பில் தன்னையும் வழக்கின் ஓர் எதிராளியாகச் சேர்த்துக்கொள்ளக் கோரும் இடையேயீட்டு விண்ணப்பம் ஒன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டத்தரணி குருபரன் அதனைச் சமர்ப்பித்து வாதிட்டார்.

எதிராளிகளான சிறீதரன், யோகேஸ்வரன், குகதாசன் ஆகியோர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அதனை ஆட்சேபிக்கவில்லை. வரவேற்றார். ஆனால், சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய எதிராளிகளும் வழக்காளியும் அதனை ஆட்சேபித்தனர்.

தனக்காக நீதிமன்றத்தில் தானே முன்னிலையான எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ .சுமந்திரன், "இந்த வழக்கை முடிக்க விடாமல் இழுத்தடிப்பதற்காவே இவ்வாறு வழக்குத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் ஒருவரை இடையேயீட்டு எதிராளியாகச் சேர்க்க விண்ணப்பிக்கப்படுகின்றது." - என்றார்.

மற்றைய எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தனும் அதேபோன்று ஆட்சேபனை முன்வைத்தார்.

அதனையொட்டி இரு தரப்பினரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, இந்த விடயத்தை ஒட்டி இரு தரப்பினரும் எழுத்து மூல ஆட்சேபனைகளைச் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும் படியும், அதன் பின்னர் நீதிமன்றம் அது தொடர்பில் உத்தரவு ஒன்றை வழங்கும் என்றும் குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.