Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு.

"மனித வாழ்க்கையைத் துன்பமாக்குவது பிணக்கு, நம்பிக்கையும் நல்லெண்ணமும் பயிலாத நெஞ்சில் பிணக்குத் தோன்றுகிறது. பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது. ஆதலினால், இன, மத, பிரதேச, சமூக வேறுபாடுகளை நோக்காது நல்லிணக்கத்துடன் வாழ்வது அவசியமாகும். குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர், குடும்பத்தினர், மூத்தோர், ஆசிரியர்கள், மற்றும் நல்லறிஞர்களின் நல்லெண்ணங்களுக்கு இணங்கி, எமது பிரதேசத்தில் பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை, இலக்கியங்கள், ஆரோக்கிய உணவு முறைமை, சுதேச வைத்தியம், தியானம், யோகாசனம், நாட்டாரியல் எனப் பலவற்றிலும் பொதிந்து போயுள்ள நல்லிணக்க வாழ்வியலை மீண்டும் கைக்கொண்டால் உங்கள் வாழ்வு ஒளிபொருந்தியதாக அமையும்" என கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ப. தமிழ்மாறன் அவர்கள் தெரிவித்தார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினர் ஒழுக்கமான, ஆரோக்கியமுடைய சமுதாயத்தை முன்னிலைப் படுத்தும் பேரெண்ணத்தோடு நேற்றைய தினம் [30]  ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலய இரட்ணசபாபதி மண்டபத்தில் இடம்பெற்ற "நல்லிணக்கம் பேணுவோம்" என்னும் தொனிப் பொருளிளான விழிப்புணர்வு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் நவாலி முருகானந்த அறநெறிப்பாடசாலை, நவாலி ஸ்ரீ நாகராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய அறநெறிப்பாடசாலை மற்றும் ஆனைக்கோட்டை இந்து சமய விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலைகளைகளில் பயிலும் 
மாணவர்களும் ஆசிரியர்களும் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்

பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது. ஒருசாராருக்கு மட்டும் போதிப்பதில் பயனில்லை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்!