Breaking News
யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகம்.
யாழ். பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில் புதன்கிழமை (15) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது. இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.