வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. மீண்டும் இணைந்த பார்த்திபன் - வடிவேலு கூட்டணி.. போட்டோவே மிரட்டுதே!
.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு தயாரிப்பு தரப்பிடம் பிரச்சனை செய்து பல கோடி நஷ்டமடைந்து அந்த படம் அப்படியே டிராப் ஆன நிலையில், ஷங்கர் கொடுத்த புகாரின் பேரில் வடிவேலு மீது ரெட் கார்டு போடப்பட்டது. சில ஆண்டுகள் அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், லைகா தலையிட்டு அந்த பிரச்சனையை சரி செய்தது. ஆனால், லைகா தயாரிப்பில் வடிவேலு நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் லைகாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் இருந்தே அந்த நிறுவனம் அடிவாங்க ஆரம்பித்து அஜித்தின் விடாமுயற்சி படம் வரை அடிவாங்கிக் கொண்டே இருப்பது தனிக்கதை.
கவுண்டமணியிடமே வம்புக்கு சென்ற வடிவேலு.. காரை வைத்து இடிக்க போனாராம்.. இவ்வளவு சேட்டையா?
வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து இயக்குநர் வி.சேகர் பேசியிருக்கும் விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இப்படியும் வடிவேலு செய்திருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
வைகை புயல் வடிவேலு சில காரணங்களால் சினிமாவிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடிந்ததன் காரணமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் மாமன்னன் மட்டும் மெகா ஹிட்டடித்தது. தற்போது அவர் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படங்களும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு மீது குற்றச்சாட்டு: வடிவேலு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சூழலில் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் வைக்கப்படுகின்றன. அதாவது அவருடன் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளே அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால் வடிவேலு அதற்கு பெரிதாக எந்தவிதமான ரெஸ்பான்ஸையும் கொடுப்பதில்லை. அதேசமயம் ஒரு சிலரோ வடிவேலுவுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள்.