அம்பாறையில் நடந்த தொடர் கொலைகள்: இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை
.
அம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறை இகினியாகல நாமல்ஓயா பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றுமொரு கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொனராகலை கரடுகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அம்பாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 மற்றும் 54 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (04) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த பெண்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.