Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பெண்களின் உலகக் கோப்பை உதைப்பந்தாட்ட போட்டி- 2024 இன் இறுதிப் போட்டிக்கு தமிழ் ஈழம் பெண்கள் அணி தெரிவாகியுள்ளது.

.

தற்போது நடைபெற்று வரும் பெண்களின் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டி- 2024 இன் இறுதிப் போட்டிக்கு தமிழ் ஈழம் பெண்கள்அணி; தெரிவாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்துள்ளோம். இந்த முறை வடக்கு நோர்வேயின் போடோவில் உள்ள ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள . போடோ வட துருவத்திற்கு தெற்கே 1,500 மைல் தொலைவில் அமைந்துள்ள நகரத்தில் இந்தப்; போட்டிகள் நடைபெறுகின்றன தமிழீழ பெண்கள் அணி செப்மீ தேசத்தின் பெண்கள் அணியோடு மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஜூன் 8, சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு (நோர்வே நேரம்) நடைபெற்று பின்னர் விருதுகள் மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கும் வைபவம் மாலை 4 மணிக்கு (நோர்வே நேரம்) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது கொனிஃபாவின் மகளிர் உலக உலக உதைப்பந்தாட்டப் போட்டியில் தமிழ் ஈழம் பெண்களின் அணி முதல் தடவையாக பங்கேற்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எமது தாய் மண்ணை அடையாளப்படுத்தும் தமிழ் ஈழம் மகளிர் கால்பந்து உதைப்ந்தாட்ட அணியில் நோர்வே, இங்கிலாந்து, சுவிஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளில் வசிக்கும் தமிழ் ஈழம்த்தை பிரதிநிதித்துவம் செய்யும் பெண் வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மெலனி சுரேஸ்குமார் என்னும் கனடிய பல்கலைக்கழக மாணவியும் விளையாடுகின்றார் என்பதும் கனடா உதயன் சர்வதேச விருது விழாவில் 2022ம் ஆண்டிற்கான 'இளையோர் அடையாள விருது' பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முகநூல் பதிவு