மத்திய வங்கி மோசடி: தப்பிச்சென்ற அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதாக அனுர உறுதி
.
தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர் மத்திய வங்கி மோசடி குறித்து நீதிமன்றத்தால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “அனுரை இதற்கு பதிலளியுங்கள்” என கூறும் பொழுது வார்த்தை தவறியதை
சுட்டிக்காட்டி அவர் கேலிக்குள்ளாக்கினார். மேலும் நாங்கள் அவமதிக்க விரும்பவில்லை, அனைவருக்கும் வயதாகிவிட்டது என கிண்டலாக பேசினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார ,
தேசிய மக்கள் சக்தியில் இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என கேட்கின்றனர். ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்?
நான் ஒரு பதில் தருகிறேன். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள,
சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.
மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார்.
அதனால் என்ன செய்தீர்கள் என்று அவர் கேள்வி கேட்கிறார். அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே முக்கிய வேலை.
நீதிமன்றம் பதில் சொல்லும். அடுத்து நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். இதை சொல்வதை விடுத்து செயலில் காணப்பிக்க நினைத்தேன். ஆனால் கேள்வி கேட்கும் பொழுது கூறாமல் இருக்க முடியாத” என்றார்.