Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

சரவணபவன் - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும் படியாக கடத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய உரிமைப் போராட்டம் தொடர்கிறது. போராட்டம் மூலம் பல நன்மையான விடயங்களை பெற்றிருக்கின்றோம். போராட்டம் உச்ச நிலையில் இருந்தபோது முள்ளிவாய்க்காலில் துவம்சம் செய்யப்பட்டார்கள்.

அன்றைய நாட்களில் மக்களின் பிரதான உணவு கஞ்சியாகவே காணப்பட்டது. எனவே எமது இனத்திற்கு நிகழ்ந்த துயரங்களை முள்ளிவாய்க்கால் கஞ்சி மூலம் எமது இளைய சமூதாயத்திற்கு கடத்தகூடிய வாய்ப்பு உள்ளது.

முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும். எனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி 9 மணிக்கு தமிழராய்ச்சி படுகொலை நினைவுத் தூபிக்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி தொடக்கிவைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து ஏனைய இடங்களிலும் தமிழரசுக் கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும், என்றார்.