Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் - தொடர்ந்தும் அதனை நிர்வகிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

,

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏஎம்பிஎம்பி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்தவிவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் தற்போது ஆலயத்தை நிர்வகிக்கின்றது, தற்போது அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றன, பௌத்த மதகுரு ஒருவர் அங்கு தங்கியுள்ளார், பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்தவிவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என அவர்  தெரிவித்துள்ள 

இந்த பெயரில் விகாரையொன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆனால் அங்கு நிலம் மட்டுமே உள்ளது, மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த ஆலயங்களை நிர்வகிக்கின்றனர் என தெரிவித்துள்ளனர், இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, இராணுவத்தினால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.