90 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
மலேசியக் கடலில் பெரும் சோகம்:
மலேசியக் கடலில் பெரும் சோகம்: 90 அகதிகளுடன் படகு கவிழ்ந்தது - மேலும் 2 படகுகள் மாயம்!
மலேசியா-தாய்லாந்து கடல் எல்லையில் இன்று ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 90 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
இந்தப் பயங்கர விபத்துகுறித்து மலேசிய காவல்துறை இன்று (நவம்பர் 9) தகவல் வெளியிட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பே இந்தப் படகு கவிழ்ந்திருக்கலாமென அஞ்சப்படுகிறதுமீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
"மொத்தம் 11 பேர் (1 சடலம் உட்பட) கிடைத்துள்ளனர். கடலில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்," என்று கடல்சார் ஆணையத்தின் இயக்குநர் ரொம்லி முஸ்தபா கவலை தெரிவித்துள்ளார். இந்தச் சோகம் நிகழ்ந்த அதே வேளையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. கவிழ்ந்த படகைப் போலவே, தலா 90 பயணிகளுடன் புறப்பட்ட மேலும் இரண்டு படகுகள் மாயமாகிவிட்டதாக மலேசிய காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார். இதனால், நூற்றுக்கணக்கானோரின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஏழ்மையான ஆசிய நாடுகளிலிருந்து, மலேசியாவில் உள்ள கட்டுமான மற்றும் விவசாயத் துறைகளில் வேலை தேடி ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறுகின்றனர். மனித கடத்தல் கும்பல்களால் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற ஆபத்தான கடல் பயணங்கள் அடிக்கடி சோகத்தில் முடிவது குறிப்பிடத்தக்கது.


