பிரான்ஸ்சில் சிகிச்சைக்கு வந்த 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வைத்தியர்.
,

பிரான்ஸ் நாட்டில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 299 பேரிடம், வைத்தியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான ஜோயல் லிஸ்கோர்னெக்(வயது 74), கடந்த 2017ஆம் ஆண்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் மீது ஏற்கெனவே குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக கடந்த 2005ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வைத்தியர் மீது ஏராளமான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இவரிடம் சிகிச்சைக்காக சென்றவர்கள் என்றும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சமயத்தில் மைனர்களாக இருந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வைத்தியர் இதுவரை 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்த வைத்தியசாலைகளில இந்த பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விசாரணையின்போது குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, தனது மகனின் தோழிகளையும் இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த பாலியல் அத்துமீறல் வழக்கு பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.